தமிழ் சினிமாவில் இருக்கும் ஓவ்வொரு பெரிய நடிகரும் தங்கள் பெயருக்கு பின்னல் பட்டம் வைத்துக்கொள்வது வழக்கமான ஒன்றுதான். சூப்பர் ஸ்டார், உலகநாயகன், இளைய தளபதி தற்போது தளபதி, அல்டிமேட் ஸ்டார் (தற்போது போட்டுக்கொள்வது இல்லை), என பலரும் தங்கள் பெயருக்கு பின்னால் பட்டம் இட்டு கொள்வார்.

அப்படி பட்டம் இட்டு கொள்ளும்போது சில பிரச்சனைகளும் எழும். அவ்வாறு, நடிகர் சூர்யாவிற்கு ஒரு பிரச்சனை எழுந்ததாம். அவரின் ஒரு ஸ்ரீ பட ரிலீஸ் சமயத்தில் சூர்யாவிற்கு புரட்சி புயல் எனும் பட்டம் ரசிகர்களால் கொடுக்கப்பட்டது. புரட்சி புயல் சூர்யா என விளம்பரம் செய்யப்பட்டது.

அந்த சமயம் அந்த புரட்சி புயல் பட்டத்தை வைத்து மதிமுக கட்சி தலைவர் வைகோவை அவரது தொண்டர்கள் வைத்து அழைத்து வந்தனர். அதனால், புரட்சி புயல் சூர்யா என விளம்பரப்படுத்தப்பட்டதால், வைகோவின் ஆதரவாளர்கள் சூர்யா தரப்பிடம் கேட்டுக்கொண்டதன் பெயரில் புரட்சி புயல் அல்ல தனக்கு எந்த பட்டமும் வேண்டாம் என்கிற முடிவை சூர்யா எடுத்ததாக அப்போதே கூறப்பட்டது.

இதன் காரணமாகத்தான் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துக்கொண்டும் தன் பெயருக்கு பின்னால் எந்த பட்டமும் வேண்டாம் என இருக்கிறார் நடிகர் சூர்யா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *