அருள்மொழிவர்மனை தொடர்ந்து ஆதித்த கரிகாலனும் தனது பணியை முடித்துவிட்டார்.!

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றன. படத்தில் நடித்திருந்த முக்கிய நடிகர்கள் தங்கள் பகுதி ஷூட்டிங்கை ஒவ்வொருவராக முடித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஜெயம் ரவி தான், ஏற்று நடித்திருந்த அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதாக சில தினங்களுக்கு முன்னர் டிவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தற்போது வெளியான தகவலின் படி, ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த விக்ரமும் தனது கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. நடிகர்கள் அனைவரும் இரண்டு பாகங்களுக்கான ஷூட்டிங்கையும் சேர்த்துதான் முடித்து வருகின்றனர்.

Latest articles

Related articles