இரண்டு பட ஷூட்டிங்கையும் ஒரே ஊரில் வைத்து முடிக்கவுள்ள சியான் விக்ரம்.!

சியான் விக்ரம் தற்போது இமைக்க நொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, மணிரத்னம் பிரமாண்டமாக இயக்கி வரும் பொன்னியின் செல்வன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் சியான்-60 ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இதில் கோப்ரா திரைப்படம் முழுவதும் முடியும் தருவாயில் உள்ளது.

தற்போது கோப்ரா படக்குழு இறுதி கட்ட ஷூட்டிங்கிற்காக கொல்கத்தா விரைந்துள்ளது. அந்த ஷூட்டிங்கில் விக்ரம் கலந்துகொண்டுள்ளார். அதே வேளையில் கொல்கத்தாவில் சியான்-60 படக்குழுவும் அங்கு சென்றுள்ளது. அதே போல அந்த ஷூட்டிங்கிலும் விக்ரம் கலந்துகொள்ள உள்ளார் இப்பட ஷூட்டிங் இன்னும் 6,7 நாட்கள் மட்டுமே மீதமுள்ளதாம்.

விரைவில் இந்த இரு திரைப்படங்களின் அடுத்தடுத்த அப்டேட் வரும்  என எதிர்பார்க்கபடுகிறது. அடுத்த வருடம் தான் பொன்னியின் செல்வன் அப்டேட் ரசிகர்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

Latest articles

Related articles