தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷனல் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் வெற்றிமாறன். இவர் அடுத்து யார் படத்தை இயக்க போகிறார். எந்த உச்ச நட்சத்திரம் இவரது இயக்கத்தில் நடிக்க போகிறார்கள் என ராசிகர்கள் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

அவரது இயக்கத்தில் தற்போது விடுதலை எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் சூரி முதன்மை வேடத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். எல்ரெட் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு அடுத்து, ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு டைட்டில் லுக் விடப்பட்ட திரைப்படம் வாடிவாசல். சூர்யா நாயகனாக நடிக்க இருக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளார். இதற்கான ப்ரீ ப்ரொடெக்சன் வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

அதனை அடுத்து விஜய் படத்தை எப்போது இயக்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், அவரே அண்மையில் ஒரு பேட்டியில், ‘ வாடிவாசல் அடுத்து, ராஜன் வகையறா (வடசென்னை ராஜன் பற்றிய வெப் சீரிஸ்) எனும் வெப் சீரிஸ், மேலும் வெப் சீரிஸ் முடித்த பிறகு தான் விஜய் படத்திற்கு வர உள்ளாராம். அதுவரை ரசிகர்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டிதான்.

இதற்கிடையில், வெற்றிமாறன் – உலகநாயகன் கமல்ஹாசன் இணையும் புதிய படமும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *