வெறித்தனமான சண்டைக்காட்சி.! என்றும் அழகான அஜித்.! வலிமையின் மோஸ்ட் வாண்டட் ஸ்டில்ஸ்…

தல அஜித் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. படத்தில் அஜித் பைக் ரேஸர் மற்றும் காவல் துறை அதிகாரி வேடம் ஏற்று நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது. படத்தினை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் பைக் ரேஸிங் காட்சிகள், சண்டை காட்சிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்களோ அந்த அளவிற்கு குடும்ப சென்டிமென்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளாரம் இயக்குனர் எச்.வினோத்.

இந்த படத்தின் முதல் போஸ்டருக்காக மட்டுமே ரசிகர்கள் சுமார் 2 வருடங்களாக காத்திருந்தனர். எங்கு சென்றாலும் வலிமை அப்டேட் கேட்பது அப்போதைய ட்ரெண்ட் ஆகிவிட்டது. அதற்கடுத்து இப்படத்தின் முதல் போஸ்டர் மோஷன் போஸ்ட்ர் விடியோவாக வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சில நாட்களுக்கு முன்னர், படத்தின் முதல் பாடல் வெளியானது. யுவனின் இசையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய நாங்க வேற மாதிரி எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது படத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில், ஒரு புகைப்படத்தில் அடியாட்கள் அந்தரத்தில் தொங்கி இருப்பது போலவும், அஜித் கிழே கையில் ஆயுதத்துடன் நிக்கிறார். இந்த கட்சி படத்தில் பெரிய ஆக்சன் காட்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் அஜித் மிகவும் இளமையாக இருக்கிறார்.

 

Latest articles

Related articles