நாளை வெளியாகிறதா வலிமை இரண்டாம் பாடல்.??

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது “வலிமை” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்திலிருந்து மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்ததாக படத்தின் இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என ரசிங்கர்கள் காத்திருந்த நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், தற்போது ஒரு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால், வலிமை இரண்டாம் பாடல் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது, ஏனனெனில், நாளை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் 42 வது பிறந்த நாள். அவருக்கு பிறந்த நாள் பரிசளிக்கும் வகையில், படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest articles

Related articles