வலிமை இரண்டாவது பாடல் அப்டேட் பற்றி கூறிய மங்காத்தா இயக்குனர்.?!

தல அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இவரது தீம் மியூசிக்கில் ஒரு மோஷன் போஸ்டர், நாங்க வேற மாறி எனும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்ப்பை பெற்றது.

இதற்கடுத்து, இரண்டாவது பாடல் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த இரண்டாவது பாடல் பற்றி இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதாவது, ‘ நானும் ஒரு அஜித் ரசிகராக வலிமை படத்தின் இரண்டாம் பாடல் பற்றி அறிந்துகொண்டதாவும், யுவன் சங்கர் ராஜா இரண்டாவது பாடலை முடித்துவிட்டத்தக்க கூறியுள்ளார்.

வெங்கட் பிரபு தற்போது சிம்புவை வைத்து மாநாடு எனும் திரைப்படத்தை எடுத்து வருகிறார். மாநாடு படத்திற்கும் யுவன் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநாடு படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி விட்டது. இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest articles

Related articles