“அனபெல் சேதுபதி” படத்தின் டிரைலர் இன்று வெளியீடு.!

இயக்குனர் தீபக் சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை டாப் சி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “அனபெல் சேதுபதி” ராதிகா, யோகி பாபு, தேவதர்ஷினி, போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த படம் வரும், தமிழ்,தெலுங்கு,கன்னடம், இந்தி, மலையாளம் என 5 மொழிகளில் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி டிஸ்னிப் + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் டிரைலர் இன்று மாலை  5 மணிக்கு வெளியாவதாகவும், அதனை சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரைலரை பார்க்க அணைத்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

AnnabelleSethupathiTrailer

 

Latest articles

Related articles