சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் அண்ணனாக களமிறங்கும் சூரி.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டான் திரைப்படம் தயாராகி வருகிறது. கல்லூரி கதைக்களத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார், லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தில் டாக்டர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வழக்கமாக வரும் காமெடி கதாபாத்திரம் போல் அல்லாமல், இதில் கதைக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். இந்த படத்தில் சூரி, சிவகார்த்திகேயனுக்கு அண்ணனாக நடிக்கிறாராம். ஏற்கனவே நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் சூரி, சிவகார்த்திகேயனுக்கு அண்ணனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

Related articles