பீஸ்ட் படத்தில் இந்த நடன இயக்குனரா..? வெளியான சூப்பர் தகவல்.!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் இதுவரை வராத அளவுக்கு ஒரு டார்க் ஆக்‌ஷன் காமெடி திரைப்படமாக பீஸ்ட் படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் துவங்கியது. அதனை தொடர்ந்து அண்மையில் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நிறைவைடைந்தது.

நான்காம் கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி, தொடங்கப்படவுள்ளது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 20-ஆம் தேதி, படக்குழு முக்கிய சண்டைக்காட்சிகாக ரஷ்யா செல்லவுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, பீஸ்ட் திரைப்படத்தில், நடிகரும், நடன இயக்குனருமான சதீஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest articles

Related articles