இது விண்ணைத்தாண்டி வருவாயா பட ஷூட்டிங்கா.?! என்றும் இளைமையுடன் சிம்பு.! வைரலாகும் புகைப்படம்.!

நடிகர் சிலபராசன் நடித்து 2010ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் தனது பாணியில் மிகவும் அற்புதமாக இயக்கியிருந்தார். படத்திற்கு ஏற்றவாறு இசைப்புயர் ஏ.ஆர்.ரகுமான் என்றும் அழியாத சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். தற்போது இவர்கள் மூவரும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். அந்த படத்திற்கு வெந்து தணிந்தது காடு என பெயர் வைத்துள்ளனர்.

இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அக்னி குஞ்சொன்று கண்டேன் என்கிற நாவலை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்படுகிறதாம். இந்த படம் கெளதம் மேனன் படங்களில் இருந்து மாறுபட்டு எடுக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூரில் இப்பட ஷூட்டிங் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு சில புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படங்களில் நடிகை ராதிகாவுடன் சிம்பு இருக்கிறார். அதில் முன்பை விட எடை குறைந்து 10 வருடத்திற்கு முன்பு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இருப்பது போல அப்படியே இருக்கிறார் என ரசிகர்கள் கொண் கொண்டாடி வருகின்றனர்.

.@SilambarasanTR_ with @realradikaa on the sets of #VendhuThanindhadhuKaadu #VTK pic.twitter.com/x0JKQUcmls

— Rajasekar (@sekartweets) August 9, 2021

Latest articles

Related articles