ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அந்த நடிகை. சுமார் 20 வருடங்களாக திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்துபவர் அந்த நடிகை. தான் காணாமல் போகும் சமயத்தில் எல்லாம் எதோ பெரிய ஹிட் கொடுத்து தானும் இன்னும் களத்தில் இருக்கிறேன் என காட்டிக்கொள்வர்.

சில வருடங்களுக்கு முன்னர் இவர் நடிப்பில் வெளியான அந்த நம்பர் படம் கூட இப்போவாரைக்கும் அவரை ஞாபகப்படுத்தி கொண்டிருக்கிறது.

அந்த நடிகைக்கு 38 வயதானாலும் இன்னும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்து வருகிறாராம். குடும்பத்தார் எவ்வளவோ வற்புறுத்தியும் முடியாது என மறுக்கிறாராம்.

அவர் வயதுள்ள பெரும்பாலான நடிகைகள், திருமணம் செய்துகொண்டு கணவர் விருப்பப்பட்டால் தொடர்ந்து சினிமாவில் நடிக்கின்றனர். இல்லையென்றால் சினிமாவுக்கு முழுக்கு போட்டு குடும்பத்தை கவனித்து வருகிறார்கள். ஆனால்,இவரோ இன்னும் சில படங்கள் கமிட் செய்துள்ளேன் அதனை முடித்துக்கொடுக்க வேண்டும். அதன் பிறகு தான் நடித்த படங்கள் வெளியாக வேண்டும் இவை அனைத்தும் முடிந்தால் தான் திருமணம் பற்றி யோசிப்பேன் என கூறி வருகிறாராம். இது குடும்பத்தினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *