பிரபல நடிகருடன் இணைந்து டூயட் பாட்டு பாடிய சிவாங்கி..!

சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் பாடகி சிவாங்கி. இதனை தொடர்ந்து இவர் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்சமயம் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும், காசேதான் கடவுளடா படத்திலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து திரைப்படங்களில் பாடல்களையும் பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ‘மாயன்’ என்ற படத்தை ராஜேஷ் கண்ணா இயக்கி வருகிறார். இதில் வினோத் மோகன் மற்றும் பிந்து மாதவி நடித்துள்ளனர். இந்த படத்தில் உள்ள பாடல் ஒன்றில் பிரபல நடிகரான சிம்புவுடன் இணைந்து சிவாங்கி டூயட் பாடல் ஒன்றை பாடியுள்ளார். ‘மச்சி’ என தொடங்கும் இந்த பாடலின் புரோமோவால் பலரது எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.  விரைவில் இந்த பாடல் வெளியிடப்போவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest articles

Related articles