மீண்டும் இணையும் டாக்டர் கூட்டணி.?! இந்த முறை எதை கடத்தப்போகிறார்களோ.?!

சிவகார்திகேயயன் நடிப்பில் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைபடம் டாக்டர். இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். பிரியங்கா மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

மெடிக்கல் க்ரைம் , பிளாக் காமெடி ஜானரில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மனித உடல் உறுப்புகளை திருடும் கும்பலை பற்றி படம் எடுக்கப்பட்டு, அனைவருக்கும் பிடிக்கும் படி படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் நெல்சன்.

தற்போது நெல்சன், தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளராம் நெல்சன். பீஸ்ட் திரைப்படம் முடிந்த பிறகு அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest articles

Related articles