தமிழகத்தில் தற்போதைக்கு வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய்தான். குழந்தைகள் முதல் வயதானவர் வரை அனைவரையும் கவரும் வகையில் படமெடுத்து ஹிட் கொடுப்பதில் சூப்பர் ஸ்டார் ரஜினி , தளபதி விஜய்க்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் வளர்ந்து வருகிறார் என்றால் அது மிகையல்ல.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியாகி ரசிகர்களை சிரிப்பலையில் மூழ்க வைத்து வசூலை வாரிக்குவித்து வரும் திரைப்படம் டாக்டர். இந்த திரைப்படம் சிவகார்த்திகேயன் பட வசூல்களிலேயே பல சாதனைகளை படைத்துவருகிறது.

இந்த திரைப்படம் அமெரிக்காவில் 440,000 டாலர்களை வசூல் செய்துள்ளது. இதற்கு முன்னர் தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் அமெரிக்காவில் 439,000 டாலர் செய்திருந்தது. தற்போது மாஸ்டர் பட அமெரிக்க வசூலை சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் முறியடித்துள்ளசெய்தி கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *