சிறந்த நடிபுக்காக ஜிவி.பிரகாஷிற்கு விருதுகள் குவியும்.! – இயக்குனர் பாராட்டு.!

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி.பிரகாஷ்நடிப்பில் கைவசம் நிறைய படங்களை தன்வசப்படுத்தியுள்ளார். அவரது நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இடி முழக்கம், ஆக்சன் திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

முதற்கட்ட படப்பிடிப்பு தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் , எடிட்டிங் வேலைகள் முடிந்துள்ளது. ஷூட்டிங்கில் எடுத்த காட்சிகளை எடிட் செய்து போட்டு பார்த்த இயக்குனர் சீனு ராமசாமி ஜிவி.பிரகாஷை வெகுவாக பாராட்டியுள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘முதற்கட்ட படப்பிடிப்பு
முடிந்து இறுதிகட்ட படப்பிடிப்பு ஆயத்தங்களுக்கு இடையில் எடுக்கப்பட்ட படத்தின் ஒட்டுமொத்த காட்சிகளும் எடிட்டிங்கில் பார்த்த பிறகு
தம்பி ஜீ.வி.பிரகாஷ் குமாருக்கு நடிப்பிற்காக விருதுகளும் வாழ்த்துகளும் உண்டு.’ என மனம் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

Latest articles

Related articles