அவசரப்பட்டு ‘அந்த’மாதிரி படத்தில் நடித்துவிட்டேனே என புலம்பும் டாக்டர் பட நடிகை.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்து வரும் திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்து இருந்தார். இதுதான் தனது முதல் தமிழ் திரைப்படம் என மேடைகளில் அவர் கூறிவந்தார்.

ஆனால், தற்போது வெளியான தகவல் என்னவென்றால், பிரியங்கா மோகன் டாக்டர் படத்திற்கு முன்பே, டிக் டாக் எனும் தமிழ் படத்தில் நடித்துமுடித்துள்ளார். ஆனால், அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை, இனிதான் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன் கவர்ச்சியாக நடித்துள்ளாராம். டாக்டர் படத்தில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு, டிக் டாக் போன்று கவர்ச்சி வேடத்தில் நடித்தால், அடுத்தடுத்து நல்ல படங்களின் வாய்ப்பு வராதே என புலம்பி வருகிறாராம் டாக்டர் பட நாயகி பிரியங்கா அருள் மோகன்.

Latest articles

Related articles