ஆக்சன் காட்சிகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் பூஜா ஹெக்டே.! நிறைவேற்றுவாரா பீஸ்ட் இயக்குனர்.?!

தளபதி விஜயின் பீஸ்ட் படத்தின் மூலம் வெகு நாட்கள் கழித்து பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவிற்குள் நுழைகிறார். இவர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி திரைப்படத்தில் அறிமுகமாகியிருந்தார். அந்த படம் சரியாக போகாததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். அங்கு அவரது திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெறவே அடுத்தடுத்து பெரிய ஹீரோ படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில், பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு இயக்குனர் நெல்சன் ஆக்சன் அதிரடி காட்சிகளை எழுதியுள்ளார். அதே போல எனக்கும் சில ஆக்சன் காட்சிகளை கொடுத்தால் அதில் நான் நடிக்க ஆர்வமாக உள்ளேன். என கூறியுள்ளார். பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவின் விருப்பத்தை ஏற்று அவருக்கு சில சண்டை காட்சிகளை கொடுப்பாரா இயக்குனர் நெல்சன் என பொறுத்திருந்து பாப்போம்.

Latest articles

Related articles