விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை வைத்து தெலுங்கில் பிரமாண்டமாக வெளியாக ரெடியாகும் பிசாசு-2?

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் திகில் திரைப்படமாக வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் பிசாசு. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. ஷூட்டிங் முடிந்த நிலையில், தற்போது பட ரிலீசுக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 15 நிமிடம் வரக்கூடிய ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த காட்சியில் விஜய் சேதுபதியின் நடிப்பு அற்புதமாக இருப்பதாக இயக்குனர் மிஷ்கின் தான் கலந்துகொள்ளும் பேட்டிகளில் கூறிவருகிறார்.

இந்நிலையில், விஜய் சேதுபதிக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உள்ளது. அதனை பயன்படுத்தி, பிசாசு -2 திரைப்படத்தை தெலுங்கிலும் டப் செய்து பிசாசி என பெயர் மாற்றி வெளியிட திட்டமிட்டுள்ளாராம் மிஷ்கின். விரைவில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest articles

Related articles