பிசாசு-2வை பார்த்து மிரண்டு போன திரைபிரபலம்.! மீண்டும் மிஷ்கினுடன்.! வாய்ப்புக்கிடைக்குமா.?

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் திகில் திரைப்படமாக வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் பிசாசு. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக பிசாசு – 2 என அதே திகில் பேய் கதை ஆனால், வேறொரு கதைக்களம் என இயக்குனர் மிஷ்கின் தனக்கே உரித்தான பாணியில் படமாக்கி வருகிறார்.

ஆண்ட்ரியா முன்னணி வேடத்தில் நடிக்க, விஜய் சேதுபதி சிறு கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் ஆண்ட்ரியா சில நிமிடங்கள் நிர்வாணமாக நடித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாதிரியான தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துளளது.

இந்த படத்தின் இறுதி கட்ட வேலைகள் முடிந்து படத்தை பார்த்த தயாரிப்பாளர் மிரண்டுவிட்டாராம். அசந்து போன தயாரிப்பாளர் மீண்டும் தனது தயாரிப்பில் மிஷ்கினை ஒரு படம் இயக்குமாறு கேட்டுக்கொண்டாராம். விரைவில் மிஷ்கினின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest articles

Related articles