ஹரீஷ் கல்யாண் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

இளம் நடிகரான ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓ மணப்பெண்ணே’. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இந்த படத்தை கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓ மணப்பெண்ணே படம் தெலுங்கு படமான ‘பெல்லி சூப்பலு’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படம் வருகின்ற அக்டோபர் 22 ஆம் தேதி நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Latest articles

Related articles