சன் டிவியில் ஒளிபரப்பான டிவி தொடர்களில் மிகவும் பிரபலமானது மெட்டி ஒலி. 90s கிட்ஸ்களால் மறக்க முடியாத தொடர்களில் ஒன்று. அதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களின் நிஜ பெயர்களை மறக்கும் அளவிற்கு தங்களுக்கான கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருந்தனர்.

அதில் கதையின் நாயகனான கோபியின் (மெட்டி ஒலி தொடரின் இயக்குனர் திருக்குமரன்) மனைவியாக நடித்தவர் தான் உமா மஹேஸ்வரி. இவருக்கு கொடுக்கப்பட்ட விஜி எனும் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

இவருக்கு தற்போது 40வயதுதான் ஆகிறது. ஆனால், அதற்குள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உயிரிழந்துவிட்டார். இந்த செய்தி மெட்டி ஓளி ரசிகர்கள் மட்டுமல்லாது, சின்னத்திரை உலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *