சிலம்பரசன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட கதையம்சமாக உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இதில், டைம் லூப் எனும் கருவை மையப்படுத்தி படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்,ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

முதலில் இப்படம் தீபாவளிக்கு திரைக்கும் வரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதே தீபாவளி தினத்தை முன்னிட்டு, சூப்பர் ஸ்டார் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் வெளியாக இருந்தது தெரிந்தும் மாநாடு அந்நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று படக்குழு ஓர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநாடு திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து பின் வாங்கியுள்ளது. மேலும், நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் வெளியான சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படமானது இந்த வருட பொங்கல் தினத்தில் வெளியானது. ஆனால், அதே தினத்தில் அதிக எதிர்பார்ப்புகளிடையே தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. ஆனால், தைரியமாக ஈஸ்வரன் திரைப்படத்தை படக்குழு வெளியிட்டது. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஒரு வேளை அதே போல மீண்டும் நடந்துவிட கூடாது என அண்ணாத்த திரைப்பதோடு மோத விருப்பமில்லாமல் மாநாடு திரைப்படத்தை நவம்பர் இறுதியில் வெளியிட உள்ளனரோ என்னவோ. இதில் இன்னொரு தகவல் என்னவென்றால், ஈஸ்வரன் திரைப்படத்தை விட மாநாடு பெரிய பட்ஜெட் திரைப்படம் அதனால் கூட தீபாவளிக்கு மோதினால் வசூலுக்கு பாதிப்பு வரும் என தனி ரிலீஸ் செய்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *