மன்னர் விஜய் சேதுபதி.! ராணியாக டாப்ஸி.! காமெடி சரவெடியாக வெளியான புதிய ட்ரெய்லர்.!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் அனபெல்லா சேதுபதி. இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை டாப்ஸி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், யோகிபாபு, ராதிகா, ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தீபக் சௌந்தரராஜன் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் செப்டம்பர் 17ஆம் தேதி ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாக உள்ளது. அதனை முன்னிட்டு இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த டிரைலரில் விஜய் சேதுபதி மன்னராக நடித்துள்ளார். டாப்ஸி ராணியாகவும், தற்காலத்து பெண்ணாகவும் நடித்துள்ளார். யோகி பாபு, ராதிகா ஆகியோர் பேயாக நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளதை படத்தின் டிரைலர் உணர்த்துகிறது. படம் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்குமா இல்லை தலையை பதம்பார்க்குமா என பொறுத்திருந்து பாப்போம்.

Latest articles

Related articles