சூர்யாவுடன் மீண்டும் இணையும் கார்த்தி.! இயக்குனர் யார் தெரியுமா.??

நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு பட வேலைகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன.

விரைவில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சர்தார் படத்தில் முழுக்க நடிக்கவுள்ளார். இந்த படங்களை தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்ததாக இயக்குனர் முத்தையா இயக்கும் கிராமத்து பின்னணியில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். கொம்பன் படம் போல கிராமத்து பின்னணியில் உருவாக உள்ளது.

இந்நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, இப்படத்தை சூர்யாவின் 2டி பட நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்கு முன்பு நடிகர் சூர்யா கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

Related articles