ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும் டிக்கிலோனாவின் 2வது சிரிப்புவெடி ட்ரைலர் இதோ…

சந்தானம் 3 வேடங்களில் நடித்து செப்டம்பர் 10ஆம் தேதி ZEE தமிழ் OTT தளத்தில் வெளியாக உள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தை கார்த்திக் யோகி என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் டைம் ட்ராவல் பற்றி எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அனகா, ஷிரின் காஞ்ச்வாலா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இப்படத்தை கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும், யோகிபாபு, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த ட்ரைலர் முழுக்க காமெடி அதகளமாக இருக்கிறது. இந்த ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதே போல படமும் ரசிகர்களின் நகைச்சுவை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Latest articles

Related articles