மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தர்மதுரை. எப்போது பார்த்தாலும் ஒரு நல்ல படம் பார்த்த உணர்வை தரும் ஒரு நல்ல படம் எனும் முத்திரையை பெற்றுள்ள இந்த தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

 

விஜய் சேதுபதியிடம் தற்போதைக்கு கால்ஷீட் இல்லை. அப்படி நடந்தால் இயக்குனரும் தயாரிப்பாளரும் குறைந்தது 2 வருடங்கள் காத்திருக்க வேண்டி வரும். அதனால், தர்மதுரை படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் , தானே தர்மதுரை 2ஆம் பாகத்தில் நடிப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறியுள்ளாராம்.

இந்த தகவல்களை அறிந்த இயக்குனர் சீனு ராமசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘தர்மதுரை பாகம் இரண்டு எடுக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. வாழ்த்துக்கள். ஆனால், அதை நான் இயக்குவதாக வரும் செய்திகள் உண்மையல்ல. ஆகவே, அது சம்பந்தமான விசயத்தில் எனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில் என் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும்.’ என தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

இதிலிருந்து, இயக்குனரின் ஆலோசனை மற்றும் அவரது பங்களிப்பு இல்லாமல் தான் தர்மதுரை-2ஆம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை நடந்தது தெரியவருகிறது. தர்மதுரை-2ஆம் பாகத்திற்கான அறிவிப்பு ஏதேனும் வருகிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *