ஒரே நேரத்தில் இரண்டு பட ஷூட்டிங்கையும் முடிக்க களமிறங்கிய தனுஷ்

நடிகர் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம், மாறன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் மாறன் திரைப்படத்தை துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.

அதேபோல, யாரடி நீ மோகினி படத்தை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் எனும் திரைப்படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். அப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கப்பட்டு தற்போது அப்படத்தின் ஷூட்டிங் விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்த இரு பட ஷூட்டிங்கும் சென்னையில் நடைபெறுவதால், நடிகர் தனுஷ் இரு பட ஷூட்டிங்கிலும் மாறி மாறி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து தனுஷ் நடிப்பில் அட்ராங்கிடே, தி கிரே மேன் எனும் வேற்றுமொழி திரைப்படங்களும் ரிலீசிற்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

Related articles