வந்துவிட்டது பிக் பாஸ் சீசன்-5.! கொண்டாட்டத்திற்கு தயாரான ரசிகர்கள்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ 4 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு, தற்போது 5 சீசன் தயாராகி வருகிறது. இந்த பிக் பாஸ் சீசன் 5 இல் யார் யார் கலந்துவுகொள்ள போகிறார்கள் என ரசிகர்கள் இணையத்தில் தங்கள் யூகங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் 5 வது சீஸனின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் இருக்கிறார். பின்னணியில் கமல் நடித்துவரும் விக்ரம் படத்தின் டீசர் மியூசிக் ஆரம்பிக்கப்பட்டு, கடைசியில் வழக்கமான பிக் பாஸ் தீம் மியூசிக் உடன் நிறைவடைகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest articles

Related articles