பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாரா நமீதா.?!

விஜய் டிவியில் பிக் பாஸ் போட்டி 4 சீசன்களை கடந்து தற்போது 5 சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த சீசனில் பிரியங்கா, ராஜு, வருண், இமான் அண்ணாச்சி, என பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் நமிதா மாரிமுத்து எனும் திருநங்கையும் கலந்துகொண்டார். போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதில், நமீதா மாரிமுத்து அவர்கள் கடந்து வந்த பாதை போட்டியாளர்களை மட்டுமின்றி ரசிகர்களையும் கவர்ந்தது.

இந்நிலையில், இன்று வெளியான பிக் பாஸ் ப்ரோமோவில் நமீதா மாரிமுத்து மட்டும் இல்லை. அவர் தாமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டார் என செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இன்று மாலை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை பார்த்தால்தான் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறாரா இல்லை வெளியேறிவிட்டாரா என தெரியவரும். இன்று சனிக்கிழமை என்பதால், கமல்ஹாசன் இன்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

Latest articles

Related articles