விஜய் டிவியில் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியில் வார முதல் நாளில் போட்டியாளர்களில் சிலர் நாமினேட் செய்யப்படுவார்கள். அதில், வார நாட்களில் அவர்களின் நடவடிக்கைகளை பார்த்துவிட்டு இணையத்தின் வாயிலாக ஓட்டு போடுவார்கள். அதில் யார் குறைவான வாக்குகள் பெருகிறாரோ அவர் அந்த வார இறுதியில் தொகுப்பாளர் கமல்ஹாசனால் அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுவார்.

சென்ற வாரம் நாடியா சங் வெளியேற்றப்பட்டார். சென்ற வார நாமினேஷனில் பவானி ரெட்டி தப்பித்துவிட்டார். அவரை போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட வில்லை. ஆனால் இந்த வார நாமினேஷனில் அவரை போட்டியாளர்கள் போட்டி போட்டுகொண்டு நாமினேட் செய்துள்ளனர்.

இந்த வார நாமினேஷனில் பவானி ரெட்டி, பிரியங்கா, அபினய், அபிஷேக், சின்ன பொண்ணு, தாமரை செல்வி, அக்சரா, ஐக்கி பேரி, இசை வாணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார். பார்க்கலாம் யார் இந்த வாரம் வெளியேறுகிறார் எனவும், பவானி ஆர்மி பவானியை காப்பாற்றுகிறதா என பார்க்கலாம்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *