தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படங்களை இயக்கிய நெல்சன் இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக இப்படத்தை தயாரித்து வருகிறது.

அனிருத் இசையமைத்து வருகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த திரைப்படமானது பல்வேறு கட்டங்களாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் படப்பிடிப்பு முடிந்து தற்போது சென்னை, ஹைதிராபாத் என நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 40 நாட்கள் மட்டுமே மீதம் உள்ளதாம். 40 நாளில் மொத்த பட ஷூட்டும் முடிந்து விடுமாம். அதாவது டிசம்பருக்குள் அனைத்து ஷூட்டிங்கும் முடிந்து விடும் என கூறப்படுகிறது.

அது முடிந்த பிறகு படத்தின் டீசர், ட்ரைலர் என வரிசைக்கட்டி களமிறக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அடுத்த வருட கோடை விடுமுறை, ஏப்ரல் 14ஐ குறிவைத்து படக்குழு படத்தை திரையிட திட்டமிட்டுள்ளதாம். அதனால், அடுத்த வருட தொடக்கத்தில் இருந்து இதற்கான வேளைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபடும் என கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *