அருண் மாதேஸ்வரன் இவரை ராக்கி எனும் படத்தின் டீசர் பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும். அப்படி ஒரு வெறித்தனமான பயமுறுத்தும் டீசரை இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்ததில்லை. திகில் காட்சி, எடிட் செய்யப்படும் லைட்டிங், சவுண்ட் எபக்ட் என ஏதும் இல்லாமல், காட்சிகளின் மூலம் மட்டுமே நம்மை மிரட்டினார்.

அந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இயக்குனர் செல்வராகவனிடம் கதை கூறி, அவரை முதன் முதலாக திரைக்கு முன்னால் கொண்டுவந்துவிட்டார். செல்வராகவன் கூடவே கீர்த்தி சுரேஷும் அருண் மாதேஸ்வரன் இரண்டாவதாக இயக்கியுள்ள சாணி காயிதம் படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. சாணி காயிதம் அமேசான் OTTயில் வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. ராக்கி திரைப்படம் எப்போது வெளியாகும் என்றே தெரியவில்லை.

அதற்கு மூன்றாவது படத்தின் கதையை தனுஷிடம் கூறி ஓகே வாங்கிவிட்டாராம் அருண் மாதேஸ்வரன். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்கிய 2 படமும் ரிலீஸ் ஆகவில்லை அதற்குள் மூன்றாவது படத்தை இயக்க அதிலும் தனுஷ் போன்ற முன்னணி நடிகரை இயக்க வாய்ப்பு பெற்றுவிட்டாரே என கோலிவுட் வட்டாரமே ஆச்சர்யத்தில் இருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *