15 கோடி பார்வையாளர்களை கடந்த அஜித் பட பாடல்..!

கடந்த 2019 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தில் நயன்தாரா, அனிகா, விவேக், யோகிபாபு, தம்பி ராமைய்யா என பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் பாடலாசிரியர் தாமரை எழுதிய கண்ணான கண்ணே பாடலை பாடகர் சித்ஸ்ரீராம் பாடியிருந்தார்.

தந்தை மகளின் அன்பை விவரிக்கும் வண்ணம் இருக்கும் இந்த பாடல் சூப்பர் ஹிட்டானது. இந்த பாடலை தற்போது யூடியூபில் 15 கோடி பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்த பாடலை 9.83 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

Latest articles

Related articles