நடிகர் – இசையமைப்பாளர் – அடுத்து வில்லன்.! சுந்தர்.சியின் அடுத்த பட வில்லன்.!

கலகலப்பு 1 & 2, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை என தனது 2வது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கினர் இயக்குனர் சுந்தர்.சி. இவர் இயக்கத்தில் தற்போது அரண்மனை 3 திரைப்படம் தயாராகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.

வெற்றிகரமாக இயக்குனராக வலம் வந்தாலும், இயக்குனர் சுந்தர்.சி அவ்வப்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவர் தற்போது தலைநகரம்-2வில் நடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து பத்ரி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படம் ஆக்சன் திரில்லராக உருவாக உள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் ஜெய்யிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். நடிகர் ஜெய், அவர் நடித்து வரும் சிவசிவா படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

Related articles