90’s கிட்ஸின் பிடித்தமான வி.ஜே ஆனந்த கண்ணன் காலமானார்.!

90’s கீட்ஸின் பிடித்தமான வி.ஜேவாக வலம் வந்தவர் ஆனந்த கண்ணன். இவர் சன் மியூஸிக்கில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள், சன் டிவியில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள், விருது விழாக்கள், வெளிநாட்டு சினிமா கலைநிகழ்ச்சிகள் என  அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான சிந்துபாத் எனும் தொடரிலும் நடித்துள்ளார்.

இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று இரவு ஆனந்த கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல திரைபிரபலன்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Latest articles

Related articles