கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் தற்போது 50% இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து சில படங்கள் தியேட்டரிலும் சில படங்கள் ஓடிடி தளத்திலும் வெளியாகி வருகிறது. இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால் அன்று 5 படங்கள் ரிலீஸ் ஆகிறது.

இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஷால் மற்றும் ஆர்யா நடித்துள்ள எனிமி, சிம்புவின் மாநாடு, அருண்விஜய் நடித்துள்ள வா டீல் ஆகிய திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாக உள்ளது. மேலும், சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெய்பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *