5 மணி அப்டேட்.! அதிகாரபூர்வ அறிவிப்பு.! டிகிலோனா ரிலீஸ் தேதி இதோ…

நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்து ரிலீசுக்கு ரெடியாகி உள்ள திரைப்படம் டிகிலோனா. இந்த படத்தில் சந்தானம் 3 வேடத்தில் நடித்து உள்ளார். டைம் மிஷின், எதிர்காலம், கடந்த காலத்திற்கு செல்வது அதனால், ஏற்படும் மாற்றங்கள் என கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது என படக்குழு வெளியிட்ட ட்ரைலரிலிருந்து நமக்கு தெரிகிறது. கார்த்திக் யோகி என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அனகா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். 

இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா சூழ்நிலை காரணமாக தியேட்டர் திறக்கப்படாமல் இருப்பதால், செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு ZEE5 OTT தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். 

அதே போல தற்போது அதிகாரபூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு ZEE5 OTT தளத்தில் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

Latest articles

Related articles