10 வருட கொண்டாட்டத்தில் மங்காத்தா.! ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட வெங்கட் பிரபு.!

தல அஜித் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இப்படம் அஜித்தின் 50வது திரைப்படமாக இப்படம் வெளியானது ரசிகர்களுக்கு கூடுதல் நெகிழ்ச்சி.

படத்தில் தல அஜித் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 50வது படமென்பதால், அஜித்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தாராமல், அர்ஜுன், திரிஷா, வைபவ், மஹத் என படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படமாக்கப்பட்டிற்குக்கும்.

படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது யுவனின் தெறிக்கும் இசை. இன்றளவும் மங்காத்தா பின்னணி இசை ரசிகர்களின் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. இப்படம் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியானது. இன்றோடு ரசிகர்களின் பேவரைட் மங்காத்தா வெளியாகி 10 வருடம் ஆகிவிட்டது. அதனை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

மங்காத்தா 10வருடம் ஆனதை கொண்டாடும் வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு ஸ்பெஷல் விடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

Latest articles

Related articles