100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த சூர்யாவின் சூப்பர் ஹிட் பாடல்.! கொண்டாடிய அனிருத்.!

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால், சுமாரான வெற்றியையே பெற்றது. ஆனால், படத்தில் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. 

இப்படத்திற்கு அனிருத் வழக்கம்போல தனது துள்ளலான இசையை கொடுத்திருந்தார். அதிலும், சொடக்கு மேல சொடக்கு பாடல் அதிரி புதிரி ஹிட் அடித்தது.  இப்பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படி பாடல்கள் அமைந்தது. இப்பாடல் தற்போது யூ – டியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 

இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக டிவிட்டரில் இசையமைப்பாளர் அனிருத் ‘ மற்றுமொரு 100 மில்லியன் ‘ என பதிவிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். 

Another century in the kitty ???? Love you all ???????? #100MillionViewsForSodakku

Thank you @Suriya_offl @VigneshShivN @KeerthyOfficial @StudioGreen2 @SonyMusicSouth @anthonydaasan #ThaanaaSerndhaKoottam pic.twitter.com/nPPnJ56Ygv

— Anirudh Ravichander (@anirudhofficial) August 14, 2021

 

Latest articles

Related articles