விவசாயிகள் படும் துன்பங்களை எடுத்துரைக்கும் ஜெயம் ரவியின் ‘பூமி’ திரை விமர்சனம்.!

நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் அவரது 25 வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் பூமி. இந்த திரைப்படத்தை இயக்குனர் லக்ஷ்மண் இயக்கியுள்ளார்.இமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். கடந்த ஆண்டு மாதம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டது.

அதன் பிறகு பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் இரவு 12 மணிக்கு   ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் பூமி திரைப்படம் வெளியாகியது . நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றி வரும் பூமிநாதன் என்ற ஜெயம்ரவி விடுமுறையை முன்னிட்டு தனது சொந்த கிராமத்திற்கு வருகிறார் .

அங்கு விவசாயிகள் படும் துன்பங்களை கண்டு வருந்தும் ஜெயம்ரவி  இங்கையே தங்கி விவசாயம் செய்ய முயல ,அவரை தடுக்க பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வரிசைக் கட்டி பிரச்சினைகள் செய்கிறது.அதை எல்லாம் எவ்வாறு கடந்து  ஜெயம்ரவி வெற்றி பெறுகிறாரா என்பது தான் கதை .

படத்தில் மற்ற நடிகர் நடிகைகளுக்கு உள்ள முக்கியத்துவத்தை விட ஜெயம்ரவிக்கு தான் அதிகம் .தனது ஒவ்வொரு காட்சியையும் உணர்வுபூர்வமாக நடித்துள்ளார் . விவசாயிகள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை எடுத்துரைப்பதுடன்,அவர்களுக்கு எதிராக சதி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் குறித்தும் படம் விரிவாக எடுத்துரைத்துள்ளது .வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி கடன் வாங்கி துன்பத்திற்குள்ளாகும் ஒரு நிஜ பிரச்சினையுடன் தொடங்கும் பூமி திரைப்படத்தில் இமான் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது .

Latest articles

Related articles