மத்திய பிரதேசத்திற்கு பறந்த பொன்னியின் செல்வன் டீம்.! கார்த்தி – பிரகாஷ்ராஜ் – மணிரத்னம்.!

தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தனது கனவு திரைப்படமாக கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்து வருகிறார். பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்து வருகிறது. 

இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா மேனன், பிரகாஷ் ராஜ், ஜெயராம், லால், பார்த்திபன், சரத்குமார் என பல்வேறு திரைநட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். 

பிரமாண்டமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தின் முதல் பாகம் 2022 ஆம் ஆண்டு வெளியாக உள்ளது. இதுவரை 80 சதவீத திரைப்பட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. தற்போது பொன்னியின் செல்வன் படக்குழு மத்திய பிரதேசம் விரைந்துள்ளது. அந்த ஷூட்டிங்கில் கார்த்தி, பிரகாஷ்ராஜ் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. 

Latest articles

Related articles