தாராள பிரபு திரைப்படத்தின் திரை விமர்சனம்..!

தாராள பிரபு படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், விவேக் மற்றும் தன்யா ஹோப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை ஸ்கிரீன் ஸீன் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. கருவுறாமை கிளினிக்கிற்கு விந்து தானம் செய்யும் ஒரு பையனின் கதை தான் தாராள பிரபு.

கதைக்களம்:

குழந்தை ஃபெர்ட்டிலிட்டி மருத்துவமனை ஒன்றை தொடங்கி பணியாற்றி வருபவர் தான் நடிகர் விவேக். குழந்தையில்லாமல் இருக்கும் தம்பதிகளில் பலர் விவேக்கின் கிளினிக்கை நம்பி வருகிறார்கள். ஆனால் அவர்கள் பயமில்லாமல் ஏமாற்றத்துடனும், வருத்தத்துடன் திரும்பி செல்வது மட்டுமில்லாமல், இந்த கிளினிக்கை மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லாமல் ஆகி விடுகிறது. இதனால் விவேக், ஒரு அரோக்கியமான ஸ்பேர்ம் டோனர் இருந்தால் நல்லது என கருதி அப்படி ஒருவரை தேடுகிறார்.

இந்த படத்தின் ஹீரோவான ஹரிஷ் கல்யாண் வேலையில்லாமல் அவர் அம்மா வைத்திருக்கும் பியூட்டி பார்லர் ஒன்றில் அம்மாவிற்கு உதவியாக பணியாற்றி வருகிறார். அந்த நிலையில் விவேக், தனது கிளினிக்கில் ஸ்பேர்ம் டோனராக பணியாற்ற ஹரிஷ் கல்யாணை அணுகுகிறார். ஆரம்பத்தில் எதிர்த்த ஹரிஷ், அதன் பின் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு ஒப்புக் கொண்டார். அதன் பின்னர், வங்கியில் பணிபுரியும் படத்தின் ஹீரோயினான தன்யா ஹோப்பை கண்டு அறிமுகமாகி, அதன் பின்னர் இருவரும் காதலும் செய்து வருகின்றனர். இதனையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெறுகிறது.

சிறிது நாட்களில் குழந்தை ஆசை வரும் தன்யா ஹோப், ஹரிஷை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார்.ஹரிஷ் ஒரு ஸ்பேர்ம் டோனர் என்பதால், சிகிச்சைக்கு செல்ல தயங்குகிறார். அதன் பின்னர் தன்யாவிடம் வேறு வழியின்றி தனது தொழிலை கூறும் ஹரிஷ், கோபமுற்று  ஹரிஷை பிரிந்து செல்கிறார் தன்யா. தனது மனைவியுடன் சேர பல முயற்சிகள் செய்த பின்னரும் பயனில்லை. அதன் பின் தன்னுடைய தாயாலும், பாட்டியாலும் வெறுக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார் ஹரிஷ்.

இந்த நிலையில், ஹரிஷின் தாய் நடத்தி வரும் பியூட்டி பார்லரை வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகையில், பல கோடி ரூபாய் பணம்  அதிகாரிகள் கையில் சிக்குகிறது. இதனால் காவல்துறை ஹரிஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை.

Latest articles

Related articles