சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த தளபதி விஜய் பட மிரட்டல் வில்லன்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஸ், ஜெகபதி பாபு என பலர் நடித்துவருகின்றனர்.

இந்த படத்தின் படவேலைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தற்போது படக்குழு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. இப்படத்தில் மற்றுமொரு வில்லனாக வேலாயுதம், தலைவா , தீரன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்த அபிமன்யு சிங் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Latest articles

Related articles