சிவகார்த்திகேயனை பார்க்க குவிந்த மக்கள்.! ஷூட்டிங்கை நிறுத்திய அதிகாரிகள்.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் தயாராகி ரிலீசுக்கு காத்துகிடக்கின்றது. இந்த படத்தை அடுத்து, புதுமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கத்தில் டான் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த டான் படத்தின் ஷூட்டிங் தற்போது பொள்ளாச்சி அருகே ஆனைமலை எனும் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் தகவல் தெரிந்ததும், அந்த பகுதி மக்கள் சிவகார்த்திகேயனை நேரில் பார்க்க கூடிவிட்டனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாகி சமூக இடைவெளியை மக்கள் மறந்தே விட்டனர். இந்த தகவலை அறிந்த அந்த பகுதி தாசில்தார் ஷூட்டிங் பகுதிக்கு விரைந்து போலீசார் உதவியுடன் பொதுமக்களை களைந்து செல்ல வைத்தனர். பின்னர் படக்குழுவினரிடம் , அனைவரும் தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்துள்ளனரா? படப்பிடிப்பு அனுமதி பெற்றுள்ளனரா? என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

டான் படத்தில் ஹீரோயினாக டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், குக் வித் கோமாளி சிவாங்கி, சூரி ஆகியோர் நடிக்கின்றனர்.

Latest articles

Related articles