சர்ச்சைகளை கிளப்பும் போஸ்டர்களால் இணையத்தை தெறிக்கவிடும் என்னங்க சார் உங்க சட்டம் படக்குழு.!

பீச்சாங்கை திரைப்படம் மூலம் ஹீரோவாக அறியப்பட்ட ஆர்.எஸ்.கார்த்திக் என்பவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் என்னங்க சார் சட்டம். இந்த திரைப்படத்தை பிரபு ஜெயராம் என்பவர் இயக்கி வருகிறார். பேஷன் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் வேலைகள் விறுவிறுவென நடைபெற்றுவருகிறது. 

இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இரண்டு போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஓட்டப்பந்தயத்தில் பலர் ஓடுவது போலவும், அந்த ஓட்டப்பந்தய தளத்தில் TNPSC என எழுதப்பட்டுள்ளது. அதில் மற்றவர்கள் ஓடு பாதையில் எந்தவித தடையும் இல்லை, அனால், ஹீரோ ஐயர் போல் இருக்கிறார் அவருடைய பாதை சிதைந்தது போல உள்ளது. இது, மற்ற சமூகத்தினருக்கு TNPSC-இல் பாதைகள் சரிவர இருப்பது போலவும், ஐயர் பிரிவினருக்கு தடை இருப்பது போலவும் இயக்குனர் குறிப்பிட்டுள்ளாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.  

“An eye for an eye cannot be justified”

Presenting the 3rd look of #YennangaSirUngaSattam ⚖️#YSUS @PassionStudios_ @KarthiikPK @jrcprabhu @itsmesoundarya @gunasekaran_gm @Sudhans2017 @jayaram_gj @thinkmusicindia @DoneChannel1 @gobeatroute pic.twitter.com/muObssYGvQ

— Passion Studios (@PassionStudios_) August 18, 2021

 

Latest articles

Related articles