இந்தி படங்களில் கவனம் செலுத்தும் சமந்தா..!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா, சமீபத்தில் கணவர் நாகசைத்தன்யாவை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்வதாக அறிவித்தார். தற்போது சமந்தாவின் கைவண்ணம் சாகுந்தலம், காத்து வாங்குல ரெண்டு காதல் படங்கள் இருக்கிறது. மேலும் வெப் சீரிஸ்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வரும் சமந்தா தி பேமிலிமென்-2 வெப் சீரிஸ் மூலம் இந்தியில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து தற்போது இந்தி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும் இந்தி படங்களில் இனி அதிக கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார். தெலுங்கு படம் ஒன்றிலும் கதையின் நாயகியாக நடிப்பதற்கு ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கவிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

Related articles