அசுர குரு திரைப்படத்தின் திரை விமர்சனம்..!

ராஜ்தீப் இயக்கத்தில் இன்று வெளியான படம் தான் அசுரகுரு. இந்த படத்தில் விக்ரம் பிரபு, மகிமா நம்பியார், நண்டு ஜெகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். கணேஷ் ராகவேந்திரா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், ராமலிங்கம் அவர்கள் அசுரகுரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கதைக்களம் :

படத்தின் ஹீரோவான விக்ரம் பிரபு சிறு வயதில் இருந்தே பணத்தை எங்கு கண்டாலும் அதை திருடும் நோயால் பாதிக்கப்பட்டவர். சில காலங்களில் பெரியவனான விக்ரம் பிரபு, சிறிய வயதில் செய்து வந்த சின்ன சின்ன திருட்டு, பெரியவன் ஆனதும் பெரிய அளவிலான திருட்டு தொழில்களில் ஈடுபடுகிறான்.

ரயிலில் நடந்த ஒரு உண்மையான கொள்ளை சம்பவம் போலவே, இதிலும் விக்ரம் ஒரு கொள்ளையை ரயிலில் நடத்துகிறார். கொள்ளையடித்த பணத்தை விக்ரம் என்ன செய்கிறார், இந்த சம்பவத்தால் என்னவெல்லாம் பிரச்சனைகள் நடக்க போகிறது என்பது தான் அசுரகுரு படத்தின் கதை.

Latest articles

Related articles