Home Blog

விஜய் சேதுபதியின் தில்லுமுல்லு சேட்டைகள் அடங்கிய அரசியல் கேடி வீடியோ பாடல் இதோ…

0

விஜய் சேதுபதி நடிப்பில் வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி சன் டிவியில் நேரடியாக வெளியிடப்பட்டு, நெட்ப்ளிக்ஸ் OTT தளத்திலும் வெளியாக உள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். அரசியல் படமாக உருவாகும் இந்த படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி உள்ளார்.

பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, தற்போது இந்த படத்தில் இருந்து அரசியல் கேடி எனும் வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசியலில் பெரிய நபராக வர நினைக்கும் விஜய் சேதுபதி செய்யும் சேட்டைகளை பாடலாகியுள்ளனர். இந்த வீடியோ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

 

உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றியை தெரிவிக்க வார்த்தைகள் போதாது.! – யுவன் நெகிழ்ச்சி.!

0

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக திகழ்கிறார் யுவ€€€€€ராஜா. இவர் நேற்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரை விட அவரின் வெறித்தனமான இசை ரசிகர்கள் இணையத்தில் யுவனின் பிறந்தநாளை கொண்டாடி தீர்த்துவிட்டார்.

இவரது பிறந்தநாளுக்கு பல திரைபிரபலங்கள் தங்கள் அன்பை வாழ்த்து மூலம் பதிவிட்டனர். இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ என் பிறந்தநாளில் ,வாழ்த்துக்க;ளையும் ஆசீர்வாதங்களையும் அளித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றியை தெரிவிக்க வார்த்தைகள் போதாது.நான் உங்கள் அன்புக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.’ என பதிவிட்டுள்ளார்.

முடிந்தது ஷூட்டிங்.! மிஷ்கினின் பிசாசுவை சந்திக்க தயாரா.?!

0

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் திகில் திரைப்படமாக வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் பிசாசு. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிவருகிறது. இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியே ரசிகர்களை திக்குமுக்காட செய்தது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது இந்த படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டது. இதனை ஒட்டி ஷூட்டிங் நிறைவு பெற்றதை படக்குழு அறிவித்துள்ளது.

விரைவில் இந்த திரைப்படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஷாலுடன் இணைந்த அந்த நடிகை.! #Vishal32 Update.!

0

விஷால் நடிப்பில் தற்போது வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது அவரின் 32வது திரைப்படம் தயாராக உள்ளது. அதற்கான பூஜை போடப்பட்டுள்ளது.

இந்த படத்தை விஷாலின் நண்பர்களான ரமணா , நந்தா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அசோக் என்பவர் இயக்க உள்ளார். 8 வருடங்களுக்கு பிறகு சுனைனா இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். சுனைனா இதற்கு முன்னர் விஷால் நடித்திருந்த சமர் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை போடப்பட்டது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

சீக்கிரமே முடிந்த காரைக்குடி ஷூட்டிங்.! விறுவிறு வேகத்தில் எதற்கும் துணிந்தவன்.!

0

சூர்யா தற்போது கடைக்குட்டி சிங்கம் பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஆக்சன் படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த காரைக்குடி ஷூட்டிங் குறித்த நேரத்திற்கு முன்னமே நிறைவு பெற்றுவிட்டது எனவும், விரைவில் அடுத்தகட்ட ஷூட்டிங்கை படக்குழு ஆரம்பிக்கவுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரிலீஸ் தேதியை அறிவித்தார் கோடியில் ஒருவன்.! விஜய் ஆண்டனியின் அடுத்த அதிரடி.!

0

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தனை மாதம் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த பெரிய தமிழ் திரைப்படமும் திரையில் வெளியாகவில்லை.

இந்நிலையில், வரும் செப்டம்பர் 17ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை மெட்ரோ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ஆனந்த் கிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ளார்.

அதற்கு முன்னர் அடுத்த வாரம் விஜய் சேதுபதி நடித்து மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள லாபம் திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிட தக்கது.

தெறிக்கும் தனுஷின் இன்ஸ்டா போஸ்ட்.! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.!

0

நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதியதாக ஒரு போஸ்ட் ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில், தனது வீட்டிற்கு புதியதாக இரண்டு நபர்கள் வந்துள்ளனர். என பதிவிட்டுள்ளார். புதியதாக இரண்டு நாய் குட்டிகளை வாங்கியுள்ளார்.அதன் பெயர் கிங் மற்றும் காங் என பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. அந்த இன்ஸ்டா போஸ்டில் தனுஷ் மிகவும் இளமையாக அழகாக இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன், மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் சென்னையில் நடைபெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Dhanush (@dhanushkraja)

#Tokyoparalympics2020 தமிழ்நாட்டின் ‘தங்கமகன்’ மாரியப்பனுக்கு 2 கோடி பரிசு.!

0

டோக்கியோவில் தற்போது பாரா ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதில், கடந்த முறை ஒலிம்பிக்கில் நம் நாட்டிற்கு தங்கத்தை பெற்றுத்தந்த தமிழ்நாட்டின் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலு, இந்தமுறை நூலிழையில் தங்கத்தை தவறவிட்டுவிட்டு, வெள்ளிப்பதக்கத்தை நம் நாட்டிற்கு அள்ளித்தந்துள்ளார்.

அவரையும், அவரைப்போல மற்றவரைகளையும் சாதிக்க ஊக்கப்படுத்தும் விதமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு 2 கோடி ரூபாய் பரிசுத்தொகையை தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

#TNCORONAUPDATE தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு.!

0

தமிழகத்தில் கடந்த 24 மணிநேர கணக்கின் படி 1,512 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,14,872 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தலைநகர் சென்னையில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில்189 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 22 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,921 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,725 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரையில் 25,63,101 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

வந்துவிட்டது பிக் பாஸ் சீசன்-5.! கொண்டாட்டத்திற்கு தயாரான ரசிகர்கள்.!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ 4 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு, தற்போது 5 சீசன் தயாராகி வருகிறது. இந்த பிக் பாஸ் சீசன் 5 இல் யார் யார் கலந்துவுகொள்ள போகிறார்கள் என ரசிகர்கள் இணையத்தில் தங்கள் யூகங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் 5 வது சீஸனின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் இருக்கிறார். பின்னணியில் கமல் நடித்துவரும் விக்ரம் படத்தின் டீசர் மியூசிக் ஆரம்பிக்கப்பட்டு, கடைசியில் வழக்கமான பிக் பாஸ் தீம் மியூசிக் உடன் நிறைவடைகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.