தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகர் தான் யோகிபாபு. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை சாதாரணமாக நடத்திய யோகிபாபு திருமண வரவேற்பு நிகழ்ச்சி பல பிரபலங்களை அழைத்து சிறப்பாக நடத்த திட்டமிட்டிருந்தார். இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடியாமல் போய்விட்டது.

இந்நிலையில் இந்த தம்பதிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தையும் பிறந்தது. தற்பொழுது திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கோவிலில் யோகி பாபு தனது மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து சாமி தரிசனம் செய்துள்ளார். அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *